தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!
Today local holiday for kanniyakumari district
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு இன்று (ஜூலை 28ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (ஜூலை 28-ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.08.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும், என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்
English Summary
Today local holiday for kanniyakumari district