இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான சனி, ஞாயிறு வழக்கமான அரசு விடுமுறை நாள், தொடர்ந்து திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக 3 நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் - அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் - அக்.25) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக இன்று (நவம்பர் 19 ஆம் தேதி, சனிக்கிழமை) பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று (சனிக்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today normal working day for school and colleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->