இன்று தொடங்குகிறது குரூப் 1 மெயின் தேர்வு.!  - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என்று 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதினார்கள். முதல்நிலை தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெளியானது. 

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட மெயின் தேர்வு டிசம்பர் 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. 

அதன்படி, குரூப்-1 மெயின் தேர்வு தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 90 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1,232 ஆண்கள், 655 பெண்கள், ஒரு இதரர் என்று மொத்தம் 1,888 பேர் எழுதவுள்ளனர். இந்தத் தேர்வு 19 மையங்களில் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start group 1 main exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->