மூன்று மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி - இன்று முதல் அமல்.! - Seithipunal
Seithipunal


மூன்று மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி - இன்று முதல் அமல்.!

தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர கால விரயம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, அரசு நடவடிக்கை எடுத்து, அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற, கட்டணத்தை இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். ஆனால், திருநங்கைகளுக்கு பெயர்மாற்றம் செய்ய விண்ணப்ப கட்டணம் இல்லை" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start name change apply in salem viruthachalam putukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->