சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம்.!
today subsidy demand in tn assembly
கடந்த 14ம் தேதி தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

அதன் பின்னர் சட்டசபைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டசபையில் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.
அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.
English Summary
today subsidy demand in tn assembly