தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் மாட்டு பொங்கல்... ! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் விழா மிகவும் கோலாகலமகா கொண்டாப்படுகிறது.

தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்படுகிறது. இந்த நாளில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிப்பர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் உழவுகருவிகள் மற்றும் தங்கள் வீடுகளில் உள்ள கால்நடைகளை சுத்தம் செய்வர். அதன்பின் சந்தனம் குங்குமிட்டு கால்நடைகளை அலங்கரிப்பர்.

பிறகு சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்திய பிறகு, வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன..

பூஜை முடிந்ததும் சலங்கை கட்டி அவற்றை ஊர்வலமாக கொண்டு செல்லுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இன்று சிவாலையங்களுக்கு சென்று அங்குள்ள நந்தி பகவானை வழிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாட்டபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tamilnadu celebrate Mattu pongal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->