#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 37 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரே நாளில் 7,524 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 37,673 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், நேற்று ஒரே நாளில் 21,435 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 23,938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today tamilnadu covid stats


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->