மொழிஞாயிறு என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தேவநேசன். 

1925ஆம் ஆண்டு சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

இவர் 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்", 'தமிழ் திராவிட மொழிகளுக்கு தாய்" என்று கூறியவர். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today thevaneya pavanar birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->