ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! அனைத்து மின்சார ரயிலில் கழிவறை வசதி!!
Toilet facility in electric train
மின்சார ரயில்கள் அனைத்திலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 450கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ரயிலில் லச்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் மின்சார ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தவகையில், சென்னை கடற்கரை - திருமால்பூர் ,சென்னை கடற்கரை - தாம்பரம் ,சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் , திருத்தணி - சென்ட்ரல், மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை என தினசரி மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
மின்சார ரயில் பயணிக்கும் பயணிகளின் நீட்ட ஆண்டு கோரிக்கைகளில் ஒன்று விரைவு ரயில் இருப்பதை போன்று ,மின்சார ரயிலும் கழிவறை வேண்டும் என்பது. அதை தீர்த்துவகைக்கும் வகையில் அனைத்து மின்சார ரயில்களிலும் 4 கழிவறைகள் ஜூன் மாதத்தில் இணைக்கப்படும் என தேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Toilet facility in electric train