தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு.. இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் மொத்தம் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் இரண்டு முறை கட்டணம் மாற்றம் செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது.  அந்தவகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதியே கட்டண மாற்றம் அமல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது.

ஆனால் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து இன்று ஜூன் 2 நள்ளிரவு முதல் கட்ட ண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் உள்ள 34 சுங்கச்சாவடிகளில் ரூ. 5 முதல் ரூ. 30 வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு வாடகைக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களை மிகவும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இதனால் சரக்கு போக்குவரத்துக் கட்டணமும் உயரும்.

இதையடுத்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விளையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கூறிய கனரக வாகன ஓட்டுனர்கள், "ட்ரக்குகளுக்கு பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய 20 முதல் 30 ஆயிரம் வரை அதிகரிக்கும். 

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. எனவே கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Toll Fees Will Increse Tonight Onwards


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->