தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கக் கட்டணம் உயர்வு!...25 சுங்கச்சாவடிகளில் 7 % வரை கட்டணம் உயர்வு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 67 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல்  25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 67  இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இரண்டு  முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டில் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படாமல், மாறாக கடந்த ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட  நிலையில், வரும் செப்டம்பர் 1ம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. .இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Toll hike in Tamil Nadu effective from midnight today Up to 7 percentage hike in 25 toll booths


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->