கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்ட சந்தைக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 

இதனை சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் சேலம் சந்தைகளில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது, "தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. 

இதன் காரணமாகவே தக்காளி விலை உயர்ந்துள்ளது. தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு கிரேட் தக்காளி ரூ.2ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி தரம் வாரியாக பிரித்து ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomattor price raised in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->