சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்..!
tomorrow all party meeting in chennai
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் சமீபத்தில் பொறுப்பெற்றார். அதைத்தொடர்ந்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கட்கிழமையான நாளை அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் மதியம் மூன்று மணியளவில் நடைபெற உள்ளது.
English Summary
tomorrow all party meeting in chennai