விடுதலைப் போராட்ட வீராங்கனை உஷா மேத்தா பிறந்ததினம்!
Freedom fighter Usha Mehta Birth Anniversary
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ரகசிய வானொலியை நிறுவி போராட்ட செய்திகள் மற்றும் தலைவர்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பிய "வீரபெண்மணி"விடுதலைப் போராட்ட வீராங்கனை உஷா மேத்தா அவர்கள் பிறந்ததினம்!.
உஷா மேத்தா (Usha Mehta, மார்ச் 25, 1920 - ஆகஸ்ட் 11, 2000) இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.
இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும் போராட்டம் தொடர்பான செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் இரகசிய ரேடியோவை உஷா மேத்தா தொடங்கினார். இதனால் வெள்ளை அரசின் உளவுத் துறையும் காவல் துறையும் உஷா மேத்தாவைக் கண்காணித்தது. எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்பத்திற்கு ஆளானார். இதனால் இரகசிய வானொலி மூன்று மாதகாலம் மட்டுமே இயங்கியது. அவரைச் சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உஷா மேத்தாவுடன் போராடிய தோழர்களின் விவரங்களைத் தெரிவிக்கக் கட்டாயப் படுத்தினர். ஆனால் உஷா மேத்தா அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. இறுதியாக 1946 ஆம் ஆண்டில் அரசு அவரை விடுதலை செய்தது.

1998 இல் உஷா மேத்தாவின் தொண்டுகளைக் கௌரவித்துப் இந்திய அரசால், பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
English Summary
Freedom fighter Usha Mehta Birth Anniversary