சோகத்தில் திரையுலகம் - பிரபல கராத்தே மாஸ்டர் காலமானார்..!
karatte master shikani husseni passed away
பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறி இருந்தார்.
இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதைப்பார்த்த துணை முதல்வர் உதயநிதி, ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவச் சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்க உத்தரவிட்டார்.
அதன் பின்னர் ஷிஹான் உடல்நிலை தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் பேசி இருந்தார். இந்த நிலையில், கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் ஷிஹானின் உடல் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகான் ஹுசைனி மறைந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
karatte master shikani husseni passed away