நடராஜர் ஆனி திருமஞ்சன விழா.. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் வலம் வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா 6-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை 6-ந்தேதி (புதன்கிழமை) விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow holiday for Annamalai University


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->