கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளி விளைகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை நேற்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து சில்லறை விற்பனையில் தக்காளி விலை 100 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ 10 ரூபாய் குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomoto price 10 rupees decrease in Chennai koyambedu market


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->