கன்னியாகுமரி : திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு..சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!! - Seithipunal
Seithipunal



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 516 கன அடி உபரிநீர் திறந்து விடப் பட்டுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1 , 145 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து 1100 கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 72.62 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 41 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 கன அடியாக உள்ளது. இதேபோல் அங்குள்ள முக்கடல் அணையிலும் நீர் வரத்து அதிகரித்து தற்போது நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்துள்ளது. 

இந்த தொடர் மழையால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப் பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourist Bath Banned in Kanyakumari Thirparappu Falls Due to Flood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->