தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை..! - Seithipunal
Seithipunal


நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிப்பு.

கர்நாடக, கேரள மாநிலங்களில் பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன.  இந்த அணைகளின் நீர் வரத்து அதிகமானதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.  கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக
 ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

அதனால், ஒக்கேனக்கல் ஆற்றில்  வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  அந்த பகுதியில் பாதுகாபு பலபடுத்தப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourist not allowed in hogenakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->