குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் - களைகட்டிய கடற்கரை.! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், ஞாயிற்றுகிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. அதிலும், குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

அதன் படி, இன்று அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். 

ஆனால், கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். 

ஆனால் இன்று காலை மழை செய்து கொண்டிருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touristers croud increase in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->