விடுமுறை எதிரொலி - கன்னியாகுமரியில் அலைமோதும் பயணிகள் கூட்டம்.!
touristers croud increase in kanniyakumari
உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், விடுமுறையான இன்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். அதன் படி சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் அணைத்து சுற்றுலா தளங்களிலும் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும், பயணிகளின் வருகையால் கடற்கரையில் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
touristers croud increase in kanniyakumari