கன்னியாகுமரி : திற்பரப்பு அருவிகளில் பொது மக்களுக்கு அனுமதி - மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!! - Seithipunal
Seithipunal



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். 

கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து வந்தது. எனவே அணைகளின் பாதுகாப்பை முன்னிட்டு உபரி நீரை திறந்து விட்டிருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக குமரி மாவட்டத்தில் வெயில் அடித்து வருகிறது. 

இதையடுத்து அணைகளுக்கும் நீர் வரத்து குறைந்துள்ளதால், அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீர், தற்போது மிதமான சூழலுக்குத் திரும்பியுள்ளது.

இதையடுத்து சில நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப் பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து இன்று ஆடிப் பெருக்கை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

இதனிடையே பேச்சிப்பாறை அணைக்கு 572 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், அணையில் இருந்து 380 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப் பட்டு வருகிறது. மேலும் பெருஞ்சாணி அணைக்கு 346 கன அடி நீர் வரும் நிலையில், 560 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists Allowed in Thirparapu Falls


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->