நிவாரண நிதியா... ஒரு பைசாகூட வரல! - டி.ஆர்.பாலு ஆதங்கம்!
TR Baalu says not received flood relief
மக்களவையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர். பாலு கலந்து கொண்டு பேசிய போது,
மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டுவதாகவும் நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை இரண்டாம் கட்டம் மெட்ரோ பனி போன்றவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை மத்திய மந்திரிகள், அதிகாரிகள் குழு பார்வையிட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்.
அதேபோல் அனைத்து கட்சி அம்பிகளும் உள்துறை மந்திரியிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் இதுவரை வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 2 கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதேபோல் ஜிஎஸ்டி திட்டத்தின் குறைபாடுகளையும் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கும் மத்திய அரசு உதவ முன் வரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
TR Baalu says not received flood relief