ராமநாதபுரம் அருகே சோகம்!...உதவி செய்த மீனவர் கடலில் விழுந்து உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த  கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் நாகராஜ். இதற்கிடையே, நேற்று பெய்த கனமழை காரணமாக  அதே பகுதியை சேர்ந்த உமையக்கண்ணன் என்பவரின் நாட்டுப்படகில் மழைநீர் தேங்கியது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக கரையில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகிற்கு நாகராஜ் நீந்தி சென்று படகில் ஏற முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்  கடலில் தவறி விழுந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து  சக மீனவர்கள் உடனடியாக கடலுக்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலிநோக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மீனவரின் உடலை பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்,  மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy near ramanathapuram the fisherman who helped fell into the sea and died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->