பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்... 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்! காவல்துறை தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்புவனத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவிடைமருதூர் திருபுவனம் தெற்கு வீதியைச் சார்ந்தவர் விக்னேஷ் ஆட்டோ டிரைவரானவர் துர்கா என்ற 20 வயது பெண்ணை  காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டைகள் நடந்து வந்ததாக தெரிகிறது. துர்கா தற்போது கர்ப்பமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.

அதன் காரணமாக மனமுடைந்த ஆறு மாத கர்ப்பிணி துர்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதும் காவல்துறை இதனை சந்தேக மரணமாக பதிவு செய்து துர்கா கணவரான விக்னேஷியிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy of woman who got married despite parents opposition police investigation as suspicious death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->