தாம்பரத்தில் தடம் புரண்ட ரயில்; தெற்கு ரயில்வே விளக்கம்..!
Train derailed in Tambaram Southern Railway explains
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டது குறித்து தென்னக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. " என்எம்சி ரேக்கின் 03 காலி சரக்கு ரெயில் பெட்டிகள் (8,9,10-வது வேகன்கள்) தாம்பரம் யார்டுக்கு மாற்றப்படும் போது தடம் புரண்டன.
அத்துடன், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும், தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில்களின் சேவையும் பாதிக்கவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.
English Summary
Train derailed in Tambaram Southern Railway explains