தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து.! காரணம் என்ன?
train service cancelled in south districts for rain
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்தக் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து, பல பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை - சென்னை இடையே இருமார்க்கங்களிலும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரெயில்களும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் விரைவு ரெயில் உள்ளிட்டவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
English Summary
train service cancelled in south districts for rain