ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு தயாரிப்பு, பதனிடுதல் பயிற்சி..மாவட்ட ஆட்சியர் தகவல்!
Training to Adi Dravidar and Tribal youth in Food Preparation and Processing. District Collector Information
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு முழு நேர உணவு தயாரிப்பு, மற்றும் பதனிடுதல் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மார்ச் 17 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பும் மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும்.இந்த நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Hotel Management Institute Survey 2022-ன்படிஉலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது
மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
English Summary
Training to Adi Dravidar and Tribal youth in Food Preparation and Processing. District Collector Information