தருமபுரி மாவட்டத்தில் 14 தாசில்தார்கள் பணியிட மாற்றம்! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வழியே உள்ளது.

பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், தருமபுரி ஆதிதிராவிடர் நலத் தனி தாசில்தாராகவும், பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த பிரசன்ன மூர்த்தி தர்மபுரி ஆலய நிறங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் சரவணன். அவர் தற்போது தர்மபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து தர்மபுரியில் தாசில்தாராக பணியாற்றி வந்த ஜெயசெல்வன் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் தர்மபுரி தாசில்தாராகவும், தர்மபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் நல்லாம்பள்ளி தாசில்தாராகவும், தர்மபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பெண்ணாகரம் தாசில்தார் ஆகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ரஜினி  என்பவர் பாலக்கோடு தாசில்தாராகவும் , காரியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்டத்தை தாசில்தார் கோவிந்தராஜ் காரியமங்கலம் தாசில்தாராகவும், தர்மபுரி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக வள்ளி பாப்புரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியிடை மாற்றம்.

நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராகவும், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் காரியமங்கலம் சமூக பாதுகாப்பு பெற்று தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்த அனைவரும் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியேறி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transfer of 14 tahsildars in Dharmapuri district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->