9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில்...

தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குனர் சுகன்யா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனர் கோபி தாஸ், தொடக்கக் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் ஞானக்கவுரி, மேல்நிலைக் கல்வி இயக்க இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குனர் ஸ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குனர் சாந்தி, தொடக்கக்கல்வி இயக்கக இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற் கல்வி இயக்கக இணை இயக்குனர் ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளர் சீரமைப்பு, மதுரை இணை இயக்குனர் ஜெயக்குமார், தொழிற்கல்வி பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி, கள்ளர் சீர் அமைப்பு மதுரை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transfer School Education Department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->