அடித்துக்கொன்று குளத்தில் வீசப்பட்ட திருநங்கை.! பூந்தமல்லி அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் அடித்துக்கொன்று திருநங்கையை குளத்தில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே வயலாநல்லூர் பகுதியில் உள்ள குளக்கரை அருகே துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது திருநங்கை ஒருவரது பிணம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வெள்ளவேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த திருநங்கை யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. ஆனால் அவரது முகம் சிதைந்தும், உடல் அழுகிய நிலையிலும் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில், மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை குளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. மேலும் இறந்த திருநங்கை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender woman who was beaten to death and thrown into the pond in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->