நேரடி நியமனம் மூலம் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!
transport department driver post direct appointment minister sivasangar info
போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் தினந்தோறும் பொது போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடபட்டது.
அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனரால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்தும் பெறப்படும்.
அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குனர் அவர்களால், ஓட்டுனர் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் அப்போக்குவரத்துக்கழக வட்டார எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.
மேலும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும்.
அப்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்படுகிறது. அந்தக்குழு நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நபர்களை, சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
transport department driver post direct appointment minister sivasangar info