திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு அரசு பேருந்து கூட நிறுத்தப்படவில்லை - அமைச்சர் சிவசங்கர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு அரசு பேருந்து கூட நிறுத்தப்படவில்லை - அமைச்சர் சிவசங்கர் பேட்டி.!

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை. 

அதிலும் கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இந்தக் கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277.13 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு எடுக்கவில்லை. அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்|" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

transport minister press meet for govt bus not stop


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->