கார் கவிழ்ந்து விபத்து: யூனியன் அலுவலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


திருச்சி, வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 57) இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 51). இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர் சியராக பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் கண்ணன் (வயது 47). 

இவர்கள் மூவரும் ஒரே காரில் சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக இன்று காலை புறப்பட்டனர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கோபி மற்றும் கண்ணன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபி மற்றும் கண்ணன் இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

ஆனால் கண்ணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விஜயலட்சுமி மற்றும் கண்ணன் இருவரது உடலையும் போலீசார் பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Car overturned accident 2 people killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->