ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற திருச்சி டிஎஸ்பி ஆல்பர்ட் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் பூலாம்குடியைச் சேர்ந்த கீதா என்பவர் ஆவண எழுத்தாளராக தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு திருவெறும்பூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டுமனை பத்திரம் பதிவு செய்வதற்கு எழுதி கொடுத்துள்ளார். அவர் கொடுத்த பத்திரமானது சுந்தரம் என்பவருக்கு சொந்தமானதால் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் 2021 ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 8 நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பதிவு செய்த போது பத்திர எழுத்தாளர் கீதாவின் பெயர் இடம் பெறவில்லை. அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட் பத்திர எழுத்தாளர் கீதாவை மீண்டும் விசாரணைக்காக அழைத்துள்ளார். இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் இந்த வழக்கில் உங்களை சேர்த்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து அவர் தனக்கும் இந்த வழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டனை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளார். அந்த பணத்தை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த திருச்சி மாநகர் டிஎஸ்பி ஆல்பர்ட் பெறும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களமாக பிடித்துள்ளனர். 

அவரைகைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் வழங்கியதாக திருச்சி டிஎஸ்பி ஆல்பர்ட் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy DSP Albert arrested for accepting bribe of Rs1 lakh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->