சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரு சடலங்கள்! காலையிலேயே கொடூரம்! - Seithipunal
Seithipunal



திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் மிகப் பிரபலமான இந்து சமய கோவில்களில் புகழ் பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 

இந்த கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், இன்று காலை இரண்டு ஆண் சடலங்கள் மிதந்தது, பக்தர்களையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு, அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே வெளியான முதல் கட்ட தகவலின் படி, அந்த இரண்டு ஆண் சடலங்களில் ஒருவருக்கு 30 வயது இருக்கும் என்றும், மற்றொரு நபருக்கு 50 வயது இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணைகள் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Samayapuram Mariyamman Temple Dead Bodys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->