பிரதமர் மோடிக்கு திமுகவை கண்டு பயம்! வெறும் 2 நிமிஷம் தான் - திருச்சி சிவா பேட்டி! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசியதாக, திமுக எம்பி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பி சிவா தெரிவிக்கையில், "கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

சுமார் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு, உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மணிப்பூரைச் சேர்ந்த 2200-க்கும் மேற்பட்ட மக்கள் மியான்மர் காடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.

மணிப்பூர் விவகாரத்தை பொருத்தவரை பிரதமர் நரேந்திர மோடியின் முழுமையான விளக்கம் தேவை. இதுவே எதிர் கட்சிகளின் முதல் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நிமிடம் மட்டுமே மணிப்பூர் விவகாரம் பற்றி பேசி உள்ளார்.

மணிப்பூர் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் தரவில்லை. மணிப்பூர் விவகாரம் முடிந்துவிட்டது போல மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

திமுகவை கண்டு பிரதமர் நரேந்திர மோடியும். மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அச்சமடைந்துள்ளனர்" என்று திமுக எம்பி சிவா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Siva MP Say About Manipur issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->