திருப்பதி: உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி - Seithipunal
Seithipunal


திருப்பதியில் உள்ள விஷ்ணுவின் இல்லம் அருகே திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கன்கள் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் டோக்கன்களைப் பெற அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த நேரத்தில் நடந்த இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக  உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தார், அதில், "திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ள துயர நிகழ்வை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

இந்தச் சோகச் சம்பவத்தில் உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என தெரிவித்து இருந்தார்.

இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சமத்துவம் என்னை மிகவும் பாதித்தது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். நான் தொடர்ந்து மாவட்ட மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tripathy tragery accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->