திருப்பூர்: கை, கால்களை கட்டி போட்டு, கண்களில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்து கொலை! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த 65 வயது மூதாட்டி இன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணை தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு, அவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி அந்த மர்ம கும்ப கும்பல் சித்திரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும், மூதாட்டியை கொலை செய்து, அவரிடம் இருந்தால் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

திருப்பூரில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கு பின்னால் வட மாநில கொள்ளை கும்பல் இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur Old Lady Murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->