நடு ராத்திரியில் கதறி அழுத டிடிஎஃப் வாசன் - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


நடு ராத்திரியில் கதறி அழுத டிடிஎஃப் வாசன் - இதுதான் காரணமா?

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்ய முயன்ற போது திடீரென சறுக்கி பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று கை கட்டுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் புழல் சிறையில் நள்ளிரவு தனக்கு முதுகு மற்றும் இடுப்பு வலிக்கிறது என்று காவலர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, காவலர்கள் டிடிஎஃப் வாசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனையில் உடல் நலன் பாதிக்கப்பட்டவரைப் போல் நடந்து கொள்ளவில்லை, கேமராவை பார்த்த உடன் சிரித்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக கையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎஃப் வாசன், கை கட்டு இல்லாமல் போலீஸாரை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைப்பார்த்த ரசிகர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க பயந்து டிடிஎஃப் வாசன் நாடகமாடுவதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttf vasan admitted stanli hospital for health issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->