போஃன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய விவகாரம்... டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்.! - Seithipunal
Seithipunal



பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது வீலிங் செய்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

இதில் அவரது வலது கை எலும்பு முறிந்தது. பின்னர் வாசன் கைது செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் மீண்டும் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய டிடிஎஃப் வாசனை மதுரை, அண்ணா நகர் போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். 

கவன குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் காரை வேகமாக ஓட்ட வில்லை எனவும் தன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ''மஞ்சள் வீரன்'' என்ற திரைப்படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF Vasan Bail issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->