முடிந்த அவகாசம்... காவல் நிலையத்தில் ஃபோன்னை ஒப்படைத்த டி.டி.எப். வாசன்.!
TTF vasan handed over cellphone to police
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 15 ஆம் தேதி நண்பர்களுடன் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்ற போது மதுரை, வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கி அதனை வீடியோவாக பதிவிட்டதால், சாலைப் போக்குவரத்து விதிமுறை மீறியதாக அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்த மதுரை, அண்ணா நகர் போலீசார் டிடிஎஃப் வாசனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் டிடிஎஃப் வாசனைக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 31 ஆம் தேதி வரை வாசன் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் ஃபாசனின் செல்போனை மூன்று நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக் ஆஜரான டிடிஎஃப் வாசல் தனது போனை ஒப்படைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் அவகாசம் இன்று முடிந்ததும் வாசன், தனது செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை மதுரை, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
English Summary
TTF vasan handed over cellphone to police