TTF வாசன் இனி 10 ஆண்டுகளுக்கு பைக்கை தொட முடியது: அதிரடி உத்தரவு!
TTF vasan licen canceled next 10 years
கடந்த மாதம் 19ஆம் தேதி யூடியூபர் டி.டி.எப். வாசன், பாலுசெட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்து நீதிமன்ற காவல் நீட்டிக்க வேண்டும் என்றும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
மேலும் மனுதாரர் கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு டி.டி.எப். வாசன் யூடியூப் தளத்தை மூடிவிட்டு அவரது பைக்கை எரித்து விடுமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிடிஎஃப் வாசனின் ஓட்டுரிமை உரிமம் சுமார் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று முதல் 2033 அக்டோபர் 5 ஆம் தேதி வரை டிடிஎஃப் வாசனை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளார்.
English Summary
TTF vasan licen canceled next 10 years