விஜயகாந்த் நினைவிடத்தில் கொந்தளித்த டிடிஎஃப் வாசன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் நிர்வாகியுமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல பிரபலங்களும்  இதுமட்டுமல்லாது, பொதுமக்களும் வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், பிரபல யூடியூபருமான டிடிஎஃப் வாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- “விஜயகாந்த் சார் மாபெரும் மனிதர். சின்ன சின்ன நடிகர்களுக்குக் கூட நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யதவர். பசி என்று வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர். 

அதனாலேயே அவரை எனக்குப் பிடிக்கும். இவ்வளவு பெரிய மனிதருடைய நினைவிடத்திற்கு வந்திருக்கிறோம். அவரைப் பற்றிய கேள்விகள் மட்டும் கேளுங்கள். என்னுடைய பர்சனல் வேண்டாம்” என்றார்.

மேலும் பேசிய வாசன், இன்று தான் காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு போய் வந்ததால் நேரமாகிவிட்டது" என்று தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் அதிவேகத்தில் பைக் சாகசம் செய்த வழக்கில் வாசன் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttf vasan tribute vijayakant memorable place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->