பாடப்புத்தகங்களை அச்சடிக்க ஆந்திராவை நாடிய தமிழக அரசு! சிவகாசி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திற்கு தமிழக அரசு வழங்கி இருப்பதாகவும், இதனால் அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழகத்தை சேர்ந்த சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் ஒரு செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

இதனை சுட்டி கட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.   

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   

எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும்" என தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran condemn to DMK Govt MK STalin School Book Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->