10 இலட்சம் ரூபாய், பறிபோன உயிரை மீட்டுத் தருமா? - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


ஆண்டுக்கணக்கில் குடியிருக்கும் ஏழைமக்களை வெளியேற்றும்போது, உரிய மாற்று இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட ஆட்சியாளர்களுக்கு கிடையாதா? என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, 

"சென்னை ராஜா  அண்ணாமலைபுரத்தில் வீடுகளை  இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்துவிட்ட நிலையில், இத்தகைய வீடுகளை அகற்றும் போது கடைபிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 

ஒருவர் உயிரை விட்ட பிறகுதான் இந்த ஞானோதயம் அரசுக்கு ஏற்படுமா? 

ஆண்டுக்கணக்கில் ஓர் இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களை விட்டு வெளியேற்றும்போது அவர்களுக்கு உரிய மாற்று இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட  ஆட்சியாளர்களுக்கு கிடையாதா? 

இவர்கள் கொடுப்பதாக கூறியுள்ள ரூ.10 இலட்சம் பறிபோன உயிரை மீட்டுத் தருமா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Mourning To kannaiya dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->