வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி - உச்சகட்ட வேதனையில் டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Mourning To Pudukottai Govt School Girls death
புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுதிர்த்துள்ள இரங்கல் செய்தியில், "புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் கரூர் அருகே மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தகவல் அறிந்து வேதனையடைந்தேன்.
தனியார் கல்லூரி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட மாணவிகளில் நான்கு பேர், இடைப்பட்ட நேரத்தில் குளிக்கச்சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.
மாணவிகளை அழைத்து சென்ற அரசு பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை கல்வி நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான கடுமையான உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு, அதை முறையாக அமல்படுத்த வேண்டும்' என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
TTV Dhinakaran Mourning To Pudukottai Govt School Girls death