அ.தி.மு.க. 3 வது இடத்திற்கு தள்ளப்படும்... டி.டி.வி. தினகரன் பகீர் பேட்டி!  - Seithipunal
Seithipunal


அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

அ.தி.மு.க. கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியாது. எடப்பாடி தன்னை தலைவர் என போட்டுக் கொண்டால் தலைவராக முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் இன்று பலவீனமாகியுள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சிலரின் சுயநலம், பதவி வெறி, துரோக புத்தியால் அ.தி.மு.க வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. பழனிச்சாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் மீதான கோபத்தின் காரணமாகவும் தி.மு.க திருந்தியிருக்கும் என்றும் தான் மக்கள் தி.மு.கவிற்கு வாக்களித்தனர். 

ஆனால் தி.மு.க 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழக முழுவதும் போதைப்பொருள் வியாபாரம், ஆளும் கட்சியினரின் உதவியுடன் தொடர்ந்து நடைபெறுகிறது.

அ.தி.மு.கவை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றியடைய வாக்கு சதவீதமும் அதிகரிக்கும். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran says admk relegated 3rd place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->