பெண்களை இழிவுபடுத்துவதும் திராவிடமாடலின் அங்கம் தானோ? - டிடிவி தினகரன் கண்டனம்..!  - Seithipunal
Seithipunal


உயர்கல்வித் துறை அமைச்சர் பெண்களைப் பார்த்து 'ஓசி பேருந்தில் பயணம் செய்பவர்கள்' என்று பேசியிருப்பதாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து 'ஓசி பேருந்தில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. 

அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இது ஓட்டுநர்களுக்கும் நடத்துனர்களுக்கும் மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?  ஒரு மூத்த அமைச்சரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?!" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran Condemnation for higher educational minister speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->