தூத்துக்குடியில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal



தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442 வது ஆண்டு பணிமயமாத பேராலய திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. 

இந்த திருவிழா வருடம் தோறும் 12 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த வருடம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி பேராலய திருவிழா தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பத்தாம் நாளான வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி தூய பணிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுகாட்டும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin august 5th local holiday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->